Sai Jothidam

எங்களின் சேவைகள்

astro image

ஜோதிடம் (Astrology)

ஜாதகம் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கைத் திட்டம். நம் அனைவருக்கும் ஒரு ஜாதகம் உள்ளது, இது நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும். இந்த ஜாதகத்தால் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி, திருமணம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவம் எனப்படும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தை கொண்டுள்ளது. இங்கு ஒரு கிரகம் அமரும் போது அதற்கான பலன்களை தர வல்லது. ஜோதிடத்தின் மிக அடிப்படையாகப் பார்க்கப்படுவது 12 ராசிகள். அந்த ராசிக்கான அமைப்பு ஜாதக கட்டமாக உள்ளது. ஒவ்வொருவரின் ஜாதகத்தில், அவர் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைப் பொருத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும். அதன் அடிப்படையில் அவருக்கான ராசி மற்றும் அதில் இருக்கும் நட்சத்திரம் என்ன என்பது தெரியும். மேலும் இது பற்றி விரிவான தகவலுக்கு எங்களை உடனே தொடர்பு கொள்ளவும்.

எண் கணிதம் (Numerology)

எண் கணிதம் எந்த வகையில் நம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கிறது அல்லது நம் வாழ்க்கையை பாதிக்கிறது, நாம் பிறந்த தேதியின் விதி எண் வைத்து நாம் எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் மற்றும் எண் கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியுமா என்பதையெல்லாம் விளக்குவதுதான் எண் கணிதம். நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். ‘எண்களை’ கொண்டு உங்கள் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கணித சாஸ்திரம். இது ஆங்கிலத்தில் ‘Numerology’ என அழைக்கபடுகிறது. இந்த உலகில் நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அடிப்படை தத்துவம் தான் Numerology. இது பற்றி விரிவான தகவலுக்கு எங்களை உடனே தொடர்பு கொள்ளவும்.

ஜெம் ஸ்டோன் பரிந்துரை

ரத்தினக் கற்கள் என்பது தாதுக்கள், பாறைகள் அல்லது கரிமப் பொருட்களாகும், அவை அவற்றின் அழகு, ஆயுள் மற்றும் அரிதான தன்மைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் வெட்டப்பட்ட அல்லது முகம் மற்றும் பளபளப்பான நகைகள் அல்லது பிற மனித அலங்காரங்களை உருவாக்குகின்றன. பெரும்பாலான ரத்தினக் கற்கள் கடினமாக இருந்தாலும், சில நகைகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மென்மையானவை அல்லது உடையக்கூடியவை, உங்கள் சுப கிரகத்தின் படி ரத்தினக் கற்கள் எப்போதும் அணியப்பட வேண்டும். பிறக்கும் போது ஏற்படும் கிரகங்களின் சீரமைப்பு, நமது முழு வாழ்க்கையையும் அதன் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே நமக்கு ஏற்ற ரத்தினக் கற்களை மட்டுமே அணிவது அவசியம். உங்கள் அதிர்ஷ்ட ரத்தினத்தை கண்டுபிடிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

இதர சேவைகள்

» ஜாதகம் பார்த்தல்
» குழந்தைக்கு பெயர் பரிந்துரைத்தல்
» எண் கணித முறையில் பெயர் மாற்றம் மற்றும் பெயரிடுதல்
» திருமணப் பொருத்தம்
» ஜெம்ஸ்டோன் பரிந்துரைத்தல்

× How can I help you?