ஜோதிடத்தை பற்றி


ஜோதிடம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜோதிஷ் என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து ஜோதிடம் என்றும், வேத ஜோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் அறியப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், லக்ணமும் குறிக்கப்படுகின்றன.
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
எங்களின் சேவைகள்

ஜோதிடம்
மேலும் அறியஎண் கணிதம்
மேலும் அறிய27 நட்சத்திரங்கள்
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரங்கள் 27 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
1. அசுவினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் 6. திரு வாதிரை 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி

அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி போன்றவை ஆகும்.
எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
