Sai Jothidam

எங்களை பற்றி

B.S. சிவகுமார்

Heaing

நான் கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிட  துறையில் ஈடுபட்டு வருகிறேன். எனது பாட்டனாரிடமிருந்து இந்த கலையை நான் கற்று பல முறைகள் சிறந்த பயிற்சி செய்து  தற்போது இந்த சேவையினை செய்து வருகிறேன்.

ஜோதிடத்தின் மீதான ஆர்வமும் ஆழ்ந்த பற்றும் என்னை ஒரு  ஜோதிடராக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.நான் இந்த தொழிலை கடமைக்காக செய்யாமல் ஒரு சேவையாக செய்வதால் எனக்கான வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளார்கள்.

இது மட்டுமில்லாமல் எண் கணிதத்திலும் எனது பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.என்னிடம் ஆலோசனை பெற்ற வாடிக்கையாளர்கள் உண்மையாகவே நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.

திருச்சியில் இருந்து செயல் பட்டாலும் எங்களின் சேவை தமிழகம் முழுவதும் உண்டு. எங்களை போன்  மூலமாகவோ அல்லது நேரிலோ வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

0+counter

வெற்றிகரமான ஜாதகங்கள்

0+counter

நியூமரலாஜி ஆலோசனைகள்

0+counter

வருட அனுபவங்கள்

0+counter

மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

12 ராசிகள்

Heaing

பல கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட குண நலன்கள் கொண்டிருப்பார்கள். இப்படி ஒவ்வொரு ராசியினரிடம் இருக்கும் தனிப்பட்ட குணம் என்ன என்பதை இங்கு காணலாம்.

மேஷம்

மேஷ ராசியினர் எந்த விஷயங்களிலும் அபாயகரமான வழியை தேர்ந்தெடுப்பது தனி குணமாகும். இவர்கள் எந்த நிலையிலும் தன் உணர்ச்சிவசப்பட்டு வெடிப்பவர்களாக இருப்பார்கள். மிகவும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருக்கும் இவர்கள், கடின உழைப்பாளர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினரிடம் இருக்கும் மிகவும் அற்புதமான குணம் பொறுப்பாக செயல்படுதல், நம்பகத்தன்மை மற்றும் தொழில் பக்தி ஆகும். இந்த குணங்கள் ஒன்றிணைந்து இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சக்தி வாய்ந்த, செல்வாக்குள்ள நபராக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினர் எந்த ஒரு விஷயத்திலும் நிச்சயமற்றவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்வார்கள். எந்த ஒரு வேலை கொடுத்தாலும் கடினமான சூழலிலும் நெகிழ்வான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

பெரிய இதயம் கொண்டவர்கள் கடக ராசியினர். எல்லோரையும் மன்னிக்கும் திறன் கொண்டவர்கள். மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் பணியிடத்தில் மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். இவர்களின் தாராள குணம் மற்றவர்களுக்கு பிடித்ததாக இருக்கும்.

சிம்மம்

நவகிரகங்களின் தலைவன் சூரிய பகவான் ஆளும் சிம்ம ராசியினர் எல்லோருக்கு தலைவனாக இருக்க நினைப்பார்கள். தலைமைப் பண்பு நிறைந்தவர்களாகவும், ஆளுமை நிறைந்திருக்கும். இவர்கள் தங்களின் சந்தோசங்களை தள்ளி வைத்து, கனவுகளை நிறைவேற்ற கடுமையாக முயற்சிகளை செய்வார்கள்.

கன்னி

கன்னி ராசியினர் தன்னிகரானவர்கள். தானே எந்த ஒரு செயலை முழுமையாகச் செய்து முடிக்க நினைப்பார்கள். இளமை துடிப்பு மிக்கவராக இருப்பார்கள். இவர்களின் அறிவாற்றல், செயல்பாடு மேம்படுத்தும் ஒன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியினர் அனைவரையும் சமநிலையாக பார்க்கும் மன நிலை கொண்டவர்கள். நீதி உணர்வு நிறைந்த இவர்கள், இவர்கள் கேள்விக்கு உட்பட்டாலன்றி இவர்கள் கோபப்படுவதில்லை. யாருக்கேனும் அநியாயம் நடப்பதைப் பார்த்தால் அவர்களுக்காக பேச தயங்கமாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் ஒரு மர்மமான நபர்கள் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வது கடினம். அதே சமயம் எந்த ஒரு கடினமான செயலையும் சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர்கள். எதையும் எளிதில் வெளிப்படுத்தாத குணம் இவர்களுடையது.

தனுசு

சுதந்திரமான மற்றும் சாகச வாழ்க்கையை முழுமையாக விரும்பி வாழக்கூடியவர்கள் தனுசு ராசியினர். நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் பல விஷயங்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் இருக்கும்.எப்படியாவது அனுபவங்களைப் பெற வேண்டும் என நினைப்பார்கள்.

மகரம்

ராசிகளில் மிகவும் நம்பகமான மற்றும் முதிர்ந்த அறிவு, அனுபவ ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டு முடிப்பதோடு, மற்றவர்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு தேட முயல்வார்கள்.

கும்பம்

எப்படிப்பட்ட கடினமான சூழல் இவர்களின் வாழ்க்கையில் புயல் போல வந்தாலும், அவர்களின் அமைதியான பாணியில் சிறப்பாக கையாள்வார்கள். ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த விதமாகவும், கடினமாக முயன்று எந்த பிரச்சினைக்கும் தீர்வுகளைப் பெற நினைப்பார்கள்.

மீனம்

கனிவான மற்றும் இரக்கமுள்ள மீன ராசியினர் தன்னலமற்ற தன்மையால் அனைவரையும் ஈர்ப்பதோடு, ஊக்கமளிப்பர். எதையும் எதிர்பார்க்காமல் அனைவரையும் மிகுந்த அன்புடன் நடத்துவார்கள். அவர்கள் விரும்பும் நபர்களுக்காக தங்கள் சொந்த தேவைகளை ஒதுக்கி வைப்பார்கள்.